| துளிக் கவிதைகள் |
| தமிழன் கனவு தேசியக் கொடி தேசிய கீதம் மலர்ந்தது.. தமிழீழம்! |
பகை இரும்புப் பறவை போடும் முட்டை, தமிழர் நிலம்! |
தாலாட்டு கூலிப் பெண் வயல் வேலை ஆலமரத் தொட்டில்! |
தமிழர் நிலம் அறுகம் புல் ஆனை வெளி அடி சறுக்கும்! |
சிறை இருண்ட சிறையில் ஒரு உலகம் கரு! |
| விளம்பரப் பலகை நிரந்தரமற்ற விலைவாசி! |
இருதலைக் கொள்ளி எறும்பு போரும் சமாதானமும்! |
போரீடு போரை வெற்றி கொள்... போர்வைக்கு;ளிருந்து புறப்பட்டவ(h)ள்! |
இயந்திரம் பிள்ளைப் பெறும் இயந்திரம் பெண்! |
உலக வாழ்க்கையின் ஒத்திகைச் சிறை கருப்பை! |
| போரும் விலைவாசியும் வளர்பிறை நிலவு! |
காந்தி தேசம் அகிம்சை தோற்றதும் உன்னிடம்! |
வெள்ளை மனிதர்கள் கருப்பு திருடர்கள் பாவம் ஏழைகள்! |
கறுப்புப் பணம் கள்ள நோட்டு உயர்ந்த வாழ்க்கை! |
பெண்ணே! நீ பூ... புயலாகவும் இரு! |
| திருப்பணி தெய்வ நம்பிக்கை போலி மனிதர்கள்! |
மீன் சிக்காத வலை இன்டர்நெட்! |
தென்றல் நடந்து கொண்டிருக்கிறது இரட்டை ஐடையில் நீ! |
|
மேலும் கவிதை
படிக்க.... |