12.07.2003 ஞாயிறு மாலை 14.00 மணிக்கு
இத்தாலி ஜெனோவா நகரில், பியாசா கப்புச்சினோ மண்டபத்தில்
அல்லையூர் சி.விஜயன் எழுதிய இன்னொரு போர்வாள்
கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது.
குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமானது,
இறைவனக்கப்பாடலை திரு, பாஸ்கரன் பாடி நிகழ்வினைத்
தொடங்கி வைக்க,
வரவேற்புரையை திரு முத்துக்குமாரு இளங்கோவன் நிகழ்த்த
நூல் வெளியீடு இனிதே ஆரம்பமானது.
சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு
அதன் நிர்வாக இயக்குனர் திரு ரவித்தமிழ்வாணன்
அவர்கள் தலைமை ஏற்க,
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த அருட்தந்தை அ.பாக்கியநாதன்
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்,
அருட்தந்தை தேவசகாயம். கொலன்டில் இருந்து வருகை தந்திருந்த
திருமதி கல்யாணி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
அல்லையூர் சி.விஜயனின் கவிதை பற்றி திருமதி யசோதா தேவகாந்தன்
சிறப்புரையாற்றினார்.
உயிரோட்டமான இந்த நிகழ்வானது எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
நூல் வெளியீட்டுக்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் மத்தியிலும்
பரபரப்பை ஏற்படுத்தியது,
நிகழ்ச்சியின் நிறைவாக நூலாசிரியர்
அல்லையூர் சி.விஜயன் ஏற்புரை நிகழ்த்தினார்.
மண்டபத்தில் விற்பனையான நூல்களில் கிடைக்கப்பெற்ற பணத்தினை தமிழர்
புனர்வாழ்வுக் கழகத்தினரால் பராமரிக்கப்படும் சிறார்களின் கல்வி
மேம்பாட்டிற்காக
அல்லையூர் சி.விஜயன் அவர்கள் வழங்கினார்,
அத்துடன்
நூல் வெளியீடு இனிதே நிறைவடைந்தது