|
வஞ்ச
மனத்தான்
படிற்றொழுக்கம்
பூதங்கள்
ஐந்தும்
அகத்தே
நகும்.
ஒழுக்க
சீலரைப்
போல
உலகத்தை
ஏமாற்றும்
வஞ்சகரைப்
பார்த்து
அவரது
உடலில்
கலந்துள்ள
நிலம், நீர்,
தீ, காற்று,
வெளி
எனப்படும்
பஞ்சபூதங்களும்
தமக்குள்
சிரித்துக்
கொள்ளும்.
வானுயர்
தோற்றம்
எவன்செய்யுந்
தன்நெஞ்சத்
தானறி
குற்றப்
படின்.
தன்
மனத்திற்குக்
குற்றம்
என்று
தெரிந்தும்கூட
அதைச்
செய்பவர்,
துறவுக்கோலம்
பூண்டிருப்பதால்
எந்தப்
பயனும்
இல்லை.
வலியில்
நிலைமையான்
வல்லுருவம்
பெற்றம்
புலியின்தோல்
போர்த்துமேய்ந்
தற்று.
மனத்தை
அடக்க
முடியாதவர்
துறவுக்கோலம்
பூணுவது,
பசு ஒன்று
புலித்தோலைப்
போர்த்திக்
கொண்டு
பயிரை
மேய்வது
போன்றதாகும்.
தவமறைந்
தல்லவை
செய்தல்
புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த்
தற்று.
புதரில்
மறைந்து
கொண்டு
வேடன்
பறவைகளைக்
கண்ணி
வைத்துப்
பிடிப்பதற்கும்,
தவக்கோலத்தில்
இருப்பவர்கள்
தகாத
செயல்களில்
ஈ.டுபடுவதற்கும்
வேறுபாடு
இல்லை.
பற்றற்றேம்
என்பார்
படிற்றொழுக்கம்
எற்றெற்றென்
றேதம்
பலவுந்
தரும்.
எத்தகைய
செயல்
புரிந்துவிட்டோம்
என்று
தமக்குத்
தாமே
வருந்த
வேண்டிய
துன்பம்,
பற்றுகளை
விட்டு
விட்டதாகப்
பொய்கூறி,
உலகை
ஏமாற்றுவோர்க்கு
வந்து
சேரும்.
நெஞ்சின்
துறவார்
துறந்தார்போல்
வஞ்சித்து
வாழ்வாரின்
வன்கணா
ரில்.
உண்மையிலேயே
மனதாரப்
பற்றுகளைத்
துறக்காமல்
துறந்தவரைப்
போல்
வாழ்கின்ற
வஞ்சகர்களைவிட
இரக்கமற்றவர்
யாருமில்லை.
புறங்குன்றி
கண்டனைய
ரேனும்
அகங்குன்றி
மூக்கிற்
கரியா
ருடைத்து.
வெளித்தோற்றத்துக்குக்
குன்றிமணி
போல்
சிவப்பாக
இருந்தாலும்,
குன்றிமணியின்
முனைபோலக்
கறுத்த
மனம்
படைத்தவர்களும்
உலகில்
உண்டு.
மனத்தது
மாசாக
மாண்டார்நீ
ராடி
மறைந்தொழுகு
மாந்தர்
பலர்.
நீருக்குள்
மூழ்கியோர்
தம்மை
மறைத்துக்
கொள்வது
போல,
மாண்புடையோர்
எனும்
பெயருக்குள்
தம்மை
மறைத்துக்கொண்டு
மனத்தில்
மாசுடையோர்
பலர்
உலவுகின்றனர்.
கணைகொடியது
யாழ்கோடு
செவ்விதாங்
கனை
வினைபடு
பாலாற்
கொளல்.
நேராகத்
தோன்றும்
அம்பு,
கொலைச்
செயல்
புரியும்.
வளைந்து
தோன்றும்
யாழ், இசை,
இன்பம்
பயக்கும்.
அது போலவே
மக்களின்
பண்புகளையும்
அவர்களது
செயலால்
மட்டுமே
உணர்ந்து
கொள்ள
வேண்டும்.
மழித்தலும்
நீட்டலும்
வேண்டா
உலகம்
பழித்த
தொழித்து
விடின்.
உலகத்தாரின்
பழிப்புக்கு
உள்ளாகும்
செயல்களைத்
துறக்காமல்
ஒரு துறவி,
தனது தலையை
மொட்டையடித்துக்
கொண்டோ,
சடாமுடி
வளர்த்துக்
கொண்டோ
கோலத்தை
மட்டும்
மாற்றிக்
கொள்வது
ஒரு
ஏமாற்று
வித்தையே
ஆகும்.
|