|
செருக்குஞ்
சினமுஞ்
சிறுமையும்
இல்லார்
பெருக்கம்
பெருமித
நீர்த்து.
இறுமாப்பு,
ஆத்திரம்,
இழிவான
நடத்தை
இவைகள்
இல்லாதவர்களுடைய
செல்வாக்குதான்
மதிக்கத்
தக்கதாகும்.
இவறலும்
மாண்பிறந்த
மானமும்
மாணா
உவகையும்
ஏதம்
இறைக்கு.
மனத்தில்
பேராசை, மான
உணர்வில்
ஊனம்,
மாசுபடியும்
செயல்களில்
மகிழ்ச்சி
ஆகியவை
தலைமைக்குரிய
தகுதிக்கே
பெருங்கேடுகளாகும்.
தினைத்துணையாங்
குற்றம்
வரினும்
பனைத்துணையாக்
கொள்வர்
பழிநாணு
வார்.
பழிக்கு
நாணுகின்றவர்கள்,
தினையளவு
குற்றத்தையும்
பனையளவாகக்
கருதி, அதைச்
செய்யாமல்,
தங்களைக்
காத்துக்
கொள்வார்கள்.
குற்றமே
காக்க
பொருளாகக்
குற்றமே
அற்றந்
தரூஉம் பகை.
குற்றம்
புரிவது
அழிவை
உண்டாக்கக்
கூடிய
பகையாக
மாறுவதால்
குற்றம்
புரியாமல்
இருப்பது
என்பதையே
நோக்கமாகக்
கொள்ள
வேண்டும்.
வருமுன்னர்க்
காவாதான்
வாழ்க்கை
எரிமுன்னர்
வைத்தூறு
போலக்
கெடும்.
முன்கூட்டியே
எச்சரிக்கையாக
இருந்து ஒரு
தவறான
செயலைத்
தவிர்த்துக்
கொள்ளாதவருடைய
வாழ்க்கையானது
நெருப்பின்
முன்னால்
உள்ள
வைக்கோல்
போர் போலக்
கருகிவிடும்.
தன்குற்ற
நீக்கிப்
பிறர்குற்றங்
காண்கிற்பின்
என்குற்ற
மாகும்
இறைக்கு.
முதலில்
தனக்குள்ள
குறையை
நீக்கிக்
கொண்டு அதன்
பின்னர்
பிறர்
குறையைக்
கண்டு
சொல்லும்
தலைவனுக்கு
என்ன குறை
நேரும்?
செயற்பால
செய்யா
திவறியான்
செல்வம்
உயற்பால
தன்றிக்
கெடும்.
நற்பணிகளைச்
செய்யாமல்
சேமித்து
வைக்கப்படும்
கருமியின்
செல்வம்
பயன்
ஏதுமின்றிப்
பாழாகிவிடும்.
பற்றுள்ள
மென்னும்
இவறன்மை
எற்றுள்ளும்
எண்ணப்
படுவதொன்
றன்று.
எல்லாக்
குற்றங்களையும்விடத்
தனிப்பெருங்
குற்றமாகக்
கருதப்படுவது
பொருள்
சேர்ப்பதில்
பற்றுக்கொண்டு
எவருக்கும்
எதுவும் ஈ.யாமல்
வாழ்வதுதான்.
வியவற்க
எஞ்ஞான்றுந்
தன்னை
நயவற்க
நன்றி பயவா
வினை.
எந்தவொரு
காலகட்டத்திலும்
தன்னைத்தானே
உயர்வாக
எண்ணிடும்
தற்பெருமைகொண்டு
நன்மை தராத
செயல்களில்
ஈ.டுபடக்
கூடாது.
காதல
காதல்
அறியாமை
உய்க்கிற்பின்
ஏதில
ஏதிலார்
நூல்.
தமது
விருப்பத்தைப்
பகைவர்
அறிந்து
கொள்ள
முடியாமல்
நிறைவேற்றுபவரிடம்
அந்தப்
பகைவரின்
எண்ணம்
பலிக்காமற்
போய்விடும்.
|