|
49. காலமறிதல்
பகல்வெல்லுங்
கூகையைக்
காக்கை
இகல்வெல்லும்
வேந்தர்க்கு
வேண்டும்
பொழுது.
பகல்
நேரமாக
இருந்தால்
கோட்டானைக்
காக்கைவென்று
விடும். எனவே
எதிரியை
வீழ்த்துவதற்கு
ஏற்ற
காலத்தைத்
தேர்ந்தெடுக்க
வேண்டும்.
பருவத்தோ
டொட்ட
ஒழுகல்
திருவினைத்
தீராமை
ஆர்க்குங்
கயிறு.
காலம்
உணர்ந்து
அதற்கேற்பச்
செயல்படுதல்,
அந்த
நற்செயலின்
வெற்றியை
நழுவவிடாமல்
கட்டிப்பிணிக்கும்
கயிறாக
அமையும்.
அருவினை
யென்ப உளவோ
கருவியாற்
கால மறிந்து
செயின்.
தேவையான
சாதனங்களுடன்
உரிய
நேரத்தையும்
அறிந்து
செயல்பட்டால்
முடியாதவை
என்று
எவையுமே
இல்லை.
ஞாலங்
கருதினுங்
கைகூடுங்
காலம்
கருதி
இடத்தாற்
செயின்.
உரிய
காலத்தையும்
இடத்தையும்
ஆய்ந்தறிந்து
செயல்பட்டால்
உலகமேகூடக்
கைக்குள்
வந்துவிடும்.
காலங்
கருதி
இருப்பர்
கலங்காது
ஞாலங் கருது
பவர்.
கலக்கத்துக்கு
இடம் தராமல்
உரிய
காலத்தை
எதிர்பார்த்துப்
பொறுமையாக
இருப்பவர்கள்
இந்த
உலகத்தையேகூட
வென்று
காட்டுவார்கள்.
ஊக்க
முடையான்
ஒடுக்கம்
பொருதகர்
தாக்கற்குப்
பேருந்
தகைத்து.
கொடுமைகளைக்
கண்டும்கூட
உறுதி
படைத்தவர்கள்
அமைதியாக
இருப்பது
அச்சத்தினால்
அல்ல் அது
ஆட்டுக்கடா
ஒன்று தனது
பகையைத்
தாக்குவதற்குத்
தன்
கால்களைப்
பின்னுக்கு
வாங்குவதைப்
போன்றதாகும்.
பொள்ளென
ஆங்கே
புறம்வேரார்
காலம்பார்த்
துள்வேர்ப்பர்
ஒள்ளி யவர்.
பகையை
வீழ்த்திட
அகத்தில்
சினங்கொண்டாலும்
அதனை
வெளிப்படுத்தாமல்
இடம் காலம்
இரண்டுக்கும்
காத்திருப்பதே
அறிவுடையார்
செயல்.
செறுநரைக்
காணிற்
சுமக்க
இறுவரை
காணிற்
கிழக்காந்
தலை.
பகைவர்க்கு
முடிவு
ஏற்பட்டு
அவர்கள்
தாமாகவே
தலைகீழாகக்
கவிழ்ந்திடும்
உரிய நேரம்
வரும்
வரையில்
தங்களின்
பகையுணர்வைப்
பொறுமையுடன்
தாங்கிக்
கொள்ள
வேண்டும்.
எய்தற்
கரிய
தியைந்தக்கால்
அந்நிலையே
செய்தற்
கரிய செயல்.
கிடைப்பதற்கு
அரிய காலம்
வாயக்கும்போது
அதைப்
பயன்படுத்திக்
கொண்டு
அப்போதே
செயற்கரிய
செய்து
முடிக்க
வேண்டும்.
கொக்கொக்க
கூம்பும்
பருவத்து
மற்றதன்
குத்தொக்க
சீர்த்த
இடத்து.
காலம்
கைகூடும்
வரையில்
கொக்குபோல்
பொறுமையாகக்
காத்திருக்கவேண்டும்.
காலம்
வாய்ப்பாகக்
கிடைத்ததும்
அது குறி
தவறாமல்
குத்துவது
போல் செய்து
முடிக்க
வேண்டும்.
|