அல்லைப்பிட்டியில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 2008.01.28 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.செயலகத்தில் யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

மீள்குடியேற்றம், பாடசாலைகளைச் சொந்த இடங்களில் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள், போக்குவரத்துப் பிரச்சினைகள், மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.தீவக அரச செயலகங்களின் அதிகாரிகள், நீர் வழங்கல், மின்சாரப் பிரிவு அதிகாரிகள்,மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

Tamilwin.com