| அது ஒரு கவிதை... இதய தாமரை... உன் பெயரை உச்சரித்து,உச்சரித்து உயிர் பிரியும் வேளையிது! உனக்காக எழுதிய ஒவ்வொரு... கவிதைகளும் கண்ணீர் சிந்திக் கலங்கிக் கொண்டிருக்கிறது! உன் மௌனத்தின் நீளங்கள் நீண்டு கொண்டே போனது... உன்னது கூந்தல்கள் போலவே! அறுந்திடும் இடைவெளி வரை... உன்னைத் தொடர்ந்தே இந்த நிழல் உன் பின்னால்... தத்தளித்துக் கொண்டிருக்கும், உயிர் மூச்சை காப்பாற்ற...வா! இல்லை, |
உன்னது கைகளால் என்னுயிரை களவாடிச் செல். உயிரின் சுமை உன் பிரிவில் கனமாகிக்,கனமாகி வெடித்து விடும் பருவத்தில் இதயம்! இன்னும்... நீ! சம்மதம் தரவில்லை? உனக்காக எழுதிய கவிதைகளும் நானும்... இதோ! பஞ்சு வெடித்து காற்றில் பறக்கிறதே, அது ஒரு கவிதை! அல்லையூர் சி.விஐயன் |