காற்று வழி வந்த சேதி...


காற்று வழி வந்த சேதி
கண்ணீரைத் தந்தது!
தமிழ்செல்வனுடன் ஐந்து வீரர்
மடிந்த கதை சொன்னது!

காற்று வழி வந்த சேதி
கனவாகிப் போகாதோ
கரிய இருள் நீக்கியிங்கு
கரிகாலன் தம்பி வாரானோ?

நீலக் கடல் ஓரம் வந்து
நினைவலைகள் நின்றது
நீ வரும் பாதை பார்த்து
நிலவுருகிக் கொண்டது!

எங்கே எங்கே தமிழ்செல்வன்
எங்கே எங்கே நீ சொல்லு
ஸ்ரீ லங்கா அரசின் வஞ்சகத்தீ
இன்னொரு விடிவைத் திண்டதுவோ?

இரவின் மடியில் பிறந்த வீரன்
விடிவைத் தேடி நடந்த சூரன்
உலகம் முழுதும் அலைந்த தோழன்
உரிமை காக்க பிறந்த வேலன்.

நீ நடந்த பாதை எங்கும்
நினைவுகளின் நீர் கோலம்
நீ சிரிக்கும் சிரிப்பொலியில்
பிறந்ததந்த ஆலோலம்..

தளபதியை இழந்து விட்டு
தானைத் தலைவன் துடித்தான்
தனையனை இழந்து விட்டு
தாயவளும் துடித்தாள்.

விடுதலைத் தீயில் தமிழ்செல்வன்
வீறு கொண்ட புயல்க் காற்று
விடிவு வரும் நாளில் வந்து
விடிவெள்ளியாக வானில் நிற்பாய்! 
தமிழீழத்தில் நிற்பாய்!

அல்லையூர் சி;.விஐயன்