தெரு வெளிப் பயணம்

போர்வடு சுமந்த
மனங்களோடு-ஒரு
தெருவெளிப்
பயணம் நீழ்கிறது!

காற்றைக் கிழித்துச் செல்லும்
செல்லுகளுக் கிடையிலும்
ஒரு காதல் மலர்கிறது!

ஈசலானாலும்,பட்டுப் பூச்சியானாலும்
மனித வாழ்கை கூட..
ஒரு நாளுக்குள் முடிந்து விடுகிறது!

காலத்தின் கைகளைப் பிடித்து
நடந்து செல்கிறது
ஒரு பயணம்!

அது,
இரவோடு இரவாக
விரிந்து, நீண்டு
மீண்டும் சுருண்டு விடும்!

அந்தப் பூவின்
இனிய பரிசங்களோடு கூடிய
ஒரு பயணம்,

அது முட்டி மோதி
வெடித்துச் சிதறும்
சன்னங்களுக்கிடையில்
வெடிக்காத ஒரு பூ!

வேளை வரும் வரை
காலம்
காத்துக் கிடக்கிறது

நீண்ட தூரம் -இந்த
தெருவெளிப் பயணம்...!

 

அல்லையூர் சி;.விஐயன்