|
ஒளியத் தேடும் இரவு கவிதைத் தொகுப்பு
நூல் வெளியீட்டு விழா
|
| ஒளியத் தேடும் இரவு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு கம்பன் கழகத்தில் நடைபெற்றது. கொழும்பு கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் மணிமேகலைப் பிரசுரத்தின் நூல் வெளியீட்டு விழா 06/03/2005 ஞாயிற்றுக் கிழமை,மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழறிஞர்கள்,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,கவிஞர்கள், வாசகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் அல்லையூர் சி.விஜயனின் ஒளியைத் தேடும் இரவு கவிதை தொகுப்பு நூலை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் திரு ரவித்தமிழ்வாணன் வெளியிட ஆசிரியை திருமதி ஜெயசீலி ஆனந்தராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தவிர்க்க முடியதா காரணங்களினால் அல்லையூர் சி,விஜயன் கலந்து கொள்ளாத இவ் விழாவிற்கு அல்லையூர் சி.விஜயனின் தாயார் திருமதி சின்னத்துரை நேசமலர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு,பொன்னம்பலம் பிரேமச்சந்திரன் சிறப்புப் பிரதியை பெற்றுக் கொண்டார்.
|
![]() |